×

மகம்

வேத, உபநிடதங்களில் மூழ்க வைத்து, ஞானானுபவத்தில் தோய வைக்கும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும், கேதுவும் இணைந்து உங்களை ஆட்சி செய்வார்கள். அதாவது சூரியனை கேது எனும் பாம்பு விழுங்குவதை இந்த அமைப்பு காட்டுகிறது. இதனால் பல சூட்சும விஷயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். ராசிநாதனான சூரியனுக்கு எதையும் எரிக்கும் சக்தி இருப்பதால், கண்ணெதிரே நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். நிறைய சம்பாதிப்பீர்கள். சேர்த்தும் வைப்பீர்கள். ஆனால், கடைசியாக எல்லாவற்றையும் துறந்து எளிய வாழ்க்கையை வாழ்வீர்கள். ‘‘எவ்ளோ சொத்து இருக்கு அவருக்கு. ஆனா, குண்டுமணி தங்கம் கூட உடம்புல அணிய மாட்டாரு’’ என்பார்கள். ஏனெனில், ஆத்மகாரகனான சூரியனும், கேதுவும் இணைந்திருப்பதால்தான். இதெல்லாம் இருக்கிறது அனுபவி. இதெல்லாம் இல்லையென்றால் என்ன செய்வாய் என்கிற வாழ்வின் நிலையாமையை சுட்டிக் காட்டும் அமைப்பு இது. கொள்கை, கோட்பாடுகளில் உறுதியோடு இருப்பீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அமைதியாக காரியம் சாதிப்பார்கள். ஆண் ஆதிக்கமுள்ள இந்த மகம் நட்சத்திரத்தில் பெண் பிறக்கும்போது அந்தப் பெண் தன்னை ஆணைப்போல காட்டிக் கொள்வாள். பொதுவாகவே எதைச் செய்தாவது, ஏதேனும் ஒரு வழியில் நினைத்ததை அடைவதற்கு முயற்சி செய்வீர்கள். மூன்று செயல்களும் செய்கின்ற தெய்வத்தின் சந்நதியில் அமர்தல் நல்லது. ஆக்கல் பிரம்மன், காத்தல் விஷ்ணு, அழித்தல் ருத்ரன் இந்த மூவருமே ஒரே சந்நதியில் ஒரே மூர்த்தத்திலிருந்து தனது அருளைப் பொழியும் சந்நதியே உங்களுக்கு ஏற்றது. அப்படிப்பட்ட ஒரு தலமே சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலாகும். மூன்று செயல்களையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உங்களின் இயல்பிலேயே உள்ளதுபோல், நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் எனும் தாணு – சிவன், மால் – திருமால், அயன் – பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கும்போது உங்களுக்குள் எப்போதும் புதுச் சக்தி திரளும்….

The post மகம் appeared first on Dinakaran.

Tags : Maam ,Kedu ,Vedic ,Upanidas ,Ghanapava ,Sun ,Shimma Zodiac ,Makam ,
× RELATED மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வீரியம்!